நிழல் இல்லாத மனிதர்கள்.
தர்மஸ்ரீபண்டாரநாயக்காவின் இயக்கத்தில் தெற்கின் கலைஞர்களால் இந்தஅரங்காற்றுகை வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளானவர்கள் முன் நிகழ்த்தப்பட்டது ஸேன் போல் சாத்திரேயின் நிழல் இல்லாத மனிதர்கள் .சாத்தரேயின் நாடகத்தின் சிங்கள வடிவம் “தவல பீஸன” இதனைக் கிரகிப்பதற்கு பெரிதாக மொழி அவசியப்படவில்லை . நாடகம் எம்முடன் எமது அனுபவங்களு}டாகடாக உரையாடியது.
சாத்தரேயின் அனுபவங்கள் பண்டாரநாயக்காவின் நெறியாள்கையில் இலங்கையின் செழுமை மிகு கலைஞர்களின் உடல்மொழி -மொழி ஒலி-ஒளி-இருள் ஊடாக உலகம் முழுவதும் இறைந்து கிடக்கும் நிழலில்லாத மனிதர்களைப்பற்றிப் பேசியது.
இலங்கையில் கடந்து வந்த 43 வருடங்களாக சித்திரவதைமுகாம்களின் இருளால் விழுங்கப்பட்ட மனிதர்களைப்பற்றிப் பேசியது. எமது அனுபவங்களில் அதிகாரங்கள் மனித அற உணர்வுகளின் மீது விடும் சவால்களைப்பற்றிப் பேசியது.
தற்போது இவை அரசுகளால் மாதிரமல்ல ஆயுதமேந்திய அதிகாரக்குழுக்களாலும் பிரயோகிக்கப்பட்டது. படுகிறது. இரண்டாம் உலகமகாயுத்ததின் பின்னர் சாத்தரேயினால் எழுதப்பட்டது. இது. இரண்டாம் உலகமகாயுத்த காலத்தில் 1940களின் முற்பகுதியில் பிரான்சின் வின்சிப் பிராந்தியத்தில்; ஹிட்லர் உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிரான்ஸ் அதிகாரவர்க்கத்தின் ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடினார்கள் . அவ்வாறு போராடிய ஐவர் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சித்திரவதை அனுபவங்களினூடாக மனிதம் அதிகார அகங்காரத்திற்கெதிராக –அதிகாரத்திற்கெதிராக போராடுவது நிகழ்த்தப்பட்டது. வதையினுள்ளே வாழ்பவர்கள் சித்திரவதைகளும் ,மன உணர்வுகளும், உரையாடலும,; இலட்சியமாயையும்- வாழ விரும்பிய-வேட்கை கொண்ட சிறுவனின் குரூர உயிர் பறிப்பும் ,குற்ற உணர்ச்சியும் , வாழ விருப்பத்தை வெளியிட்ட அப்பாவிச் சிறுவனை அவனின் அக்காளை கோர்க்கியின் “துரோகியின் தாய்” சாயல் தெரிந்தாலும் அவளல்ல இவள். இவள் சற்று வித்தியாசமானவள். அந்த மரணமும் இவளின் வேதனையும் மனதில் அழியாத துயரத்தடமாகி விடுகின்றன.
“நேர்மையாக வாழவேண்டுமாயின் வதைபடுதலும் குழம்பிக் கலங்குதலும் முட்டி மோதுதலும், பிழைபுரிதலும் , தொடங்குதலும் தூக்கி எறிதலும் பிழைபுரிதலும் திரும்பவும் தொடங்குதலும் மனநிம்மதி அது ஆன்மாவின் இழிநிலை” என்ற ரால்ஸ்ராயின் வார்த்தைகளை மனக்கண் முன் கொண்டு வருகிறார்கள்.
வதைமுகாமில் தனது முடிவை தானே தீர்;மானிக்க வாய்ப்புக் கிடைத்தவனின் சுதந்திர நகைப்பும்- மரணமும் வதையும் ,வெடியும், கொலையின் சிரிப்பும் மௌனிக்கப்பட்ட இருப்பும் அதிகாரத்தின் முட்டாள் தலையில் மனச்சாட்சியைக் குடிகொள்ளவிடாமல் கொல்லும் இழிவும் சாத்தரே விபரித்த மனித வதைகள் இன்று கொண்டனாமா வளை குடா தொடக்கம் மேற்காசியா ,மத்திய கிழக்கு அடங்கலாக உலகம் முழுவதும் விதம் விதமாக வருகை தந்துள்ளன. வலம் வருகின்றன.
அதிகாரங்கள் தமது இருப்புக்கான விஸ்தரிப்புக்கான ஒரு பிரதான கருவியாக நிறுவியுள்ளன. 60 லட்சம் யூதர்கள் படுகொலை ,ஒரு கோடி சோவியத் மக்களின் உயிர்த்தியாகம,; ஹீரோசீமா நாகசாக்கியில் 45 ஆயிரம் பேர் இறந்து போன கணப்பொழுதுகளின் பின்னர் தான் போல் சாத்தரே . இந்த நிழல் இல்லாத மனிதர்களைப்பற்றி பதிவுசெய்கிறார் .
ஆயுதப்படை, நீதிமன்றம் ,சிறைச்சாலை என்பதற்கப்பால் சிததிரவதைமுகாம்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன. தனிப்பட்ட மனிதனின் நடத்தைகளை கண்காணித்தல் வேவுபார்த்தல் , அந்தரங்கத்தில் தலையீடு தனது மனச் சாட்சியின் படி நடந்து கொண்ட எட்வேட் சுனோடன் என்ற சாமானிய மனிதன் உலகத்தின் எந்த மூலையில் ஒழிந்து கொள்வது என்று தடுமாறுகிறான்.
எல்லாம் அதிகாரத்தின் இருப்பிற்கு அவர்கள் சவால் விடுகிறார்கள் என்பதே. இலங்கையில் அரசமற்றும் அரசல்லாத இயக்கச் சித்திரவதைக் கூடங்கள் பற்றிய அனுபவங்கள் வௌ;வேறு காலங்களில் பதிவு செய்யப்பட்டன. செ. கணேசலிங்கத்தின் “வதையின் கதை”யும், ரஜனி மற்றும் மனித உரிமைமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் முறிந்த பனை, சோபா சக்தியின் “ம்” புஸ்பராணியன் “அகாலம்”,;வெலிகடைச் சிறைப்படுகொலைகள், “மனநோயாளிகள்”;; ,கந்தன் கருணைப் படுகொலைகள் ,யோகர்ணனின் எழுத்துக்கள் ,சிவசேகரத்தின் சில சிறை- வதை பற்றிய கவிதைகள் , மணியத்தின் தொடரும் புலிகளின் வதைமுகாம் குறிப்புக்கள்
பல்வேறு அனுபவங்களை பெற்று எவையுமே பதிவு செய்யப்படாமல் இன்றும் மிச்சமாய் சாட்சியங்களாக இன்றும் ஆண்களும் பெண்களுமாக நடைப்பிண வாழ்வு வாழும் பலநூற்றுக்கணக்கானவர்கள், இன்னும் அந்தகார இருளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்,
செக்கோசலவாக்கிய- நாசி- கெஸ்டபோ வதைமுகாமில் சில நாட்களே உயிர் வாழ்ந்த பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புக்கள்
அன்னி பிராங்கின் டயறி மற்றும் வாழ்க்கை எல்லாமே மனித வதை பற்றிய கேள்விகளே. காலங்கள் தாண்டி வதைகள் வாழ்கின்றன. மனித கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும்.
சாத்திரேயின் தர்மஸ்ரீபண்டாரநாயக்காவினால் இயக்கப்பட்டு உன்னதமான கலைஞர்களின் இந்த ஆற்றுகை மனித வாழ்வியல் இருப்பு அறத்தின்; பல்வேறு பரிமாணங்களை- மனித மனச்சாட்சியின் கதவுகளைத்திறக்கும் விதமாக அமைகின்றன.
வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு அரங்காற்றப்பட்டது மிகுந்த மனநிறைவைத்தருகிறது. இலங்கையின் தெற்கின் மக்களின் கலாச்சார ஆன்மாவின் உன்னதத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
புரவந்தகளுவர சினிமாவாக இருக்கலாம். தவல பீஸண நாடகமாக இருக்கலாம் எமது அற நெறி அதிகாரங்கள் பற்றி விசாரணை செய்கின்றன.
மெல்லிதயங்களை மனிதர்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாம் எல்லாம் மனிதர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அதிகாரங்கள் தடையாக இருக்கின்றன என்பதை இந்த நாடகம் உணர்த்துகிறது.
இது எனக்கும் என்போன்ற பலருக்கும் சொந்த அனுபவம்.
சித்திரவதை ,இரத்தவாடை ,புத்தியல்லாத மனிதரை நேசிக்கத்தெரியாத வக்கிர பிரகிருதிகள். மனித சடலங்கள் எரியும் நெருப்பின் நிழல்கள் எங்கள் வதைகூடங்களின் உயரத்திலிருக்கும் கையகலத்துவாரங்களினூடே எதிர்ச் சுவரில் நிழலாக ஆடுவதைப்பார்த்திருக்கிறோம்.
நிழலில்லாத மனிதர்கள் தர்மஸ்ரீபண்டாரநாயக்கா அவருடன் கலைஞர்களின் ஆற்றுகை மனிதத்தின் மாண்பை உயர்த்தி நிற்கிறது. இனம்புரியாதநேசமொன்று ஏற்படுகிறது. இந்த நாடகம் உள்ள+ரிலும் புலம்பெயர் தளத்திலும் திரும்ப திரும்ப நிகழ்த்தப்படவேண்டும்.
அறவழியில் மனங்களை பண்படுத்துவதற்கான இது திரும்ப திரும்ப உள்ள+ரிலும் புலம்பெயர்தளத்திலும் ஆற்றுகைப்படுத்தபடவேண்டும் . சுதந்திரத்தின் மகிiயைச் சொல்கிறது.
அந்தோன் செக்கோவின் குதிரை வண்டிக்காரர் தனது குதிரைக்கு தனது துன்பங்களைச் சொல்வது போல் தான் இங்கு பலபேருடைய நிலைமை.
இந்த நாடகம் மனிதத்தை உரத்துச் சொல்லுகிறது.
எங்கள் சுயதரிசனம் சுயவிசாரணைக்கும் இது தேவைப்படுகிறது.
சுகு-ஸ்ரீதரன்
|